பிரபல WWE குத்துச்சண்டை வீரர் மாரடைப்பால் மரணம் – சோகத்தில் ரசிகர்கள்


முன்னாள் WWE வீரரான ஸ்காட் ஹால் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக வெளியான தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிறந்தவர்கள் வரை அவர்களது காலக்கட்டத்தில் ஒளிபரப்பான WWE எனப்படும் பொழுதுப்போக்கு குத்துச்சண்டை என்பது மிக முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது என்றே சொல்லலாம். 

காலத்தின் தேவைக்கேற்ப அது தன்னை மாற்றிக் கொண்டாலும் தங்களுடைய சூப்பர்ஸ்டார்களை இன்றளவும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

அந்த வகையில் 90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் WWE வீரராக வலம் வந்த ஸ்காட் ஹால் (எ) ரேசர் ரோமன் தனது 63 வயதில் மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு WWE ல் அறிமுகமான ஹால் 4 முறை இன்டர்கான்டினென்டல் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். 

பின் 1996 ஆம் ஆண்டு அறிமுகமான WCW போட்டியில் கலந்துகொண்டு கெவின் ஆஷ் மற்றும் ஹல்கோகான் ஆகியோருடன் இணைந்து நியூயார்க் ஆர்டர் எனும் டீமை துவங்கினார். தன்னுடைய வித்தியாசமான பாணியிலான ஆட்டத்தால் ரசிகர்களின் அன்பைப் பெற்ற ஸ்காட் ஹால் இடுப்பு முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,  நேற்று அவருக்கு அடுத்தடுத்து 3 முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அவரது மறைவை முன்னிட்டு WWE அமைப்பு அஞ்சலி செலுத்தி உள்ளது. தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்காட் ஹாலின் பிரபல வரிகளான “Bad times don’t last, but bad guys do” என்பதை குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.