திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மீண்டும் காட்டு தீ கொளுந்து விட்டு எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்த வண்ணம் உள்ளது.
இந்த தீயை அணைக்கும் பணியில் 25க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதே போன்று வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாட்டுப்பட்டி மற்றும் பள்ளங்கி பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களிலும் எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக காட்டில் வசிக்கும் விலங்குகள் தீயின் வெம்மை தாளாமல் பிரதான மலைச்சாலைகளில் உலா வரும் அபாயம் எழுந்துள்ளது.