புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராஜாமணி படேல், “இந்தியாவில்
கொரோனா
தொற்றால் இறந்தவர்கள் எத்தனை பேர்? அவர்களுடைய குடும்பங்களுக்கு அரசால் எவ்வளவு உதவி வழங்கப்பட்டது?” என்று கேள்வி கேட்டார்.
அதற்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்து மூலம் பதில் அளித்தார்.
அந்தப் பதிலில், “இந்தியாவில்
கொரோனா
வால் 2020 மார்ச் மற்றும் 2021 அக்டோபர் 31 வரையில், 4 லட்சத்து 58 ஆயிரத்து 186 பேர் இறந்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலமாக அரசு,
கொரோனா
வால் இறந்தவர் என்று சான்றளிக்கப்பட்ட நபருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க பரிந்துரைத்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநிலங்களால் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களின் பொறுப்பு ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற மருத்துவ பத்திரிகையான ‘தி லேன்செட்’ பத்திரிகை 2020 ஜனவரி மற்றும் 2021 டிசம்பர் இடையே இந்தியாவின் மதிப்பிடப்பட்ட ஒட்டுமொத்த
கொரோனா
இறப்புகள், பதிவாகியதை விட 8 மடங்கு அதிகம் என குறிப்பிட்டுள்ளது. ஆனால், இது முரண்பாடானது என்று மத்திய அரசு நிராகரித்து விட்டது.