நாட்டில் எந்தப் பகுதியிலும் மின்சாரத் தட்டுப்பாடு பிரச்னை இல்லை என்று மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர். கே.சிங் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இதுதொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் எந்தப் பகுதியிலும் மின்சாரத் தட்டுப்பாடு என்ற பிரச்னை எழவில்லை என்றார்.
நாட்டின் மின்சார உற்பத்தித் திறன் 395.6 ஜிகா வாட் என்ற அளவில் உள்ளதாக கூறிய அவர் இது நாட்டின் மின்தேவையை எதிர்கொள்ளத் தேவையான உற்பத்தி அளவாகும் என்றார். நீர் மின்சாரம், அணு மின் உற்பத்தி, சூரிய சக்தி, காற்றாலை, உயிரி கழிவுகள் மூலம் மின்சாரத்தை அதிக அளவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.