உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை இழந்ததால், நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எண்ணிக்கை 3 இல் இருந்து 2 ஆக குறைந்துள்ளது.
இப்படி படுமோசமான நிலையில் உள்ள காங்கிரஸை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் டஃப் கொடுக்குமா என்பது குறித்து
பிரசாந்த் கிஷோர்
விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “சோனியா காந்தி குடும்பத்தினர் காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்து வெளியேறிவிட்டால் மட்டும் அக்கட்சி புத்துயிர் பெற முடியாது. அதன் சித்தாந்தங்கள், கருத்துக்கள் என அனைத்தும் ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
‘கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்!’ – மாணவர்களுக்கு முதல்வர் ஆறுதல்!
தென்னிந்தியா மற்றும் கிழக்கு மாநிலங்களில் மொத்தமுள்ள சுமார் 200 தொகுதிகளில் பாஜக 50 இடங்களில் வெற்றி பெறவே பாஜக இன்னமும் திணறிக் கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் காங்கிரஸ் தனது செயல் திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தினாலே 2024 தேர்தலில் பாஜகவுக்கு டஃப் கொடுக்க முடியும். எனவே 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாய்ப்பு இருக்கதான் செய்கிறது. காங்கிரஸ் நினைத்தால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சக்தியாக உருவெடுக்கலாம்” என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோரின் இந்த கருத்துகள் தேர்தல் தோல்வியால் துவண்டு போயுள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை கொஞ்சம் உற்சாகம் அடைய செய்துள்ளது.