சீனாவின் முன்னணி டெக் நிறுவனங்கள் மக்கள் மத்தியிலும், வர்த்தகச் சந்தையிலும் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் காரணத்தால் ஜி ஜின்பிங் அரசு டெக் நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வந்ததில் பல முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல்களை அதிகப்படியாகத் திரட்டுவதிலிருந்து மோனோபோலியாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல செயல் முறைகளைப் பயன்படுத்தி வருவதை அரசு கண்டுபிடித்தது.
தங்கத்திற்கு சூப்பர் தள்ளுபடி.. 6 ஆண்டுகளில் இல்லாதளவு உச்சம்.. ஜாக்பாட் தான்!
இதைத் தொடர்ந்து டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்தை மொத்தமாகக் குறைக்கும் விதமாக அனைத்து முன்னணி நிறுவனத்திலும் கடுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதித்தது.
சீன அரசு
இதைத் தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்களில் அரசு அமைப்புகள், அரசு நிறுவனங்கள் முதலீடு செய்து பங்குகளைக் கைப்பற்றி, அரசு சார்பாக நிர்வாகக் குழுவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இது டெக் நிறுவனங்கள் மத்தியில் ஆதிக்கம் குறைந்து வர்த்தகம், வருமானம் தொடர்ந்து குறைந்து வந்தது.
ஹாங்காங் பங்குச்சந்தை
இதன் வாயிலாக ஹாங்காங் பங்குச்சந்தையில் இருக்கும் சீனாவின் முன்னணி டெக் நிறுவனப் பங்குகள் அனைத்தும் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் கடந்த 13 மாதத்தில் டென்சென்ட் மற்றும் அலிபாபா பங்குகள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு மதிப்பீட்டை இழந்துள்ளது.
Hang Seng குறியீடு
சீனா அரசின் நடவடிக்கைக்குப் பின்பு ஹாங்காங் பங்குச்சந்தையின் Hang Seng Tech Index சுமார் 65 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் பல முன்னணி முதலீட்டாளர்கள் சீன டெக் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய நிலையில் ஜேபி மோர்கன் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் எச்சரிக்கையும் விடுத்தது.
2.1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பு
ஹாங்காங் பங்குச்சந்தையின் Hang Seng Tech Index சுமார் 65 சதவீத வரையிலான வீழ்ச்சியில் சுமார் 2.1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பு மாயமாகியுள்ளது. இது சீன டெக் முதலீட்டாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய நிறுவனம்
இந்நிலையில் கடந்த 13 மாதத்தில் டென்சென்ட் – 530.5 பில்லியன் டாலர், அலிபாபா குரூப் -521.7 பில்லியன் டாலர், மெயூடன் 254.6 பில்லியன் டாலர், Pinduoduo – 217.6 பில்லியன் டாலர், Kuaishou – 189.9 பில்லியன் டாலர், ஜேடி.காம் 96.6 பில்லியன் டாலர், KE ஹோல்டிங்க்ஸ் – 68.2 பில்லியன் டாலர், நியோ இன்க் – 66.6 பில்லியன் டாலர், ஜேடி ஹெல்த் இண்டர்நேஷ்னல் – 56.4 பில்லியன் டாலர், சியோமி – 56.1 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
xi jinping’s China Govt Tech crackdown made Alibaba, Tencent cry on $1 trillion MCAP lost
xi jinping’s China Govt Tech crackdown made Alibaba, Tencent cry on $1 trillion MCAP lost ஜி ஜின்பிங் செய்த காரியத்தால் 1 லட்சம் கோடி டாலர் நஷ்டம்.. அழுது புலம்பும் 2 நிறுவனங்கள்..!