ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய காட்சி உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 21வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, நேற்று அந்நாட்டின் கெர்சன் நகரத்தை முழுமையாக கைப்பற்றியதாக அறிவித்தது.
இந்நிலையில், கார்கிவ் நகருக்கு அருகே எதிரி நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய வீடியோவை உக்ரேனிய தரைப்படை வெளியிட்டுள்ளது.
உக்ரேனிய Buk-M1 வான் பாதுகாப்பு அமைப்பில் மூலம் ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டள்ளது.
வீடியோவில், வான் பாதுகாப்பு அமைப்பிலிருந்து சீறிச் செல்லும் ராக்கெட், வானில் பறந்து வந்த ரஷ்ய விமானத்தை தாக்குகிறது.
இதில், அந்த விமானம் வெடித்து தரையில் விழும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
மார்ச் 16ம் திகதி நிலவரப்படி, உக்ரைன் மீதான படையெடுப்பில் கிட்டதட்ட13,800 வீரர்களையும், 84 விமானங்களையும், 108 ஹெலிகாப்டர்களையும் ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் ஆயுதப்படை தகவல் தெரிவித்துள்ளது.
These are the indicative estimates of Russia’s losses as of March 16, according to the Armed Forces of Ukraine. pic.twitter.com/QwOv9N1SSX
— The Kyiv Independent (@KyivIndependent) March 16, 2022