மதுரை மாவட்டம் எழுமலை அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மள்ளப்புரத்தைச் சேர்ந்த 70 வயதான முதியவர் சண்முகவேல், எம்.கல்லுப்பட்டி பழனியப்பா தியேட்டர் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட முதியவர் தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.