அறந்தாங்கி நிஷா’ கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடித்து வருகிறார்.
இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார்.
இப்போது நிஷா விஜய் டிவியின் ஃபேமஸ் சீரியல் பாரதி கண்ணம்மாவிலும் நடிக்கிறார்.
இந்நிலையில் நிஷா தனது கருப்பு ரோஜா யூடியூப் சேனலில் பகிர்ந்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.
வீடியோ ஆரம்பிக்கும்போதே, இன்னைக்கு பாரதி கண்ணம்மா ஷூட்டிங் போறேன். அங்க நடக்கிற சின்ன சின்ன ஃபன் ஆன விஷயங்களை உங்ககிட்ட ஷேர் பண்ணலானு நினைச்சேன். ஷூட்டிங்’ல நாங்க எப்பவுமே ஜாலியா இருப்போம். சில நேரங்கள்ல நிறைய பேரு இருக்க மாட்டாங்க. நானும் கண்ணமாவும் மட்டும் இருப்போம். சில நேரம் எல்லாருமே இருப்பாங்க.. இந்த 2,3 நாள் எல்லாருமே இருக்க போறோம். அதனால ஜாலியா உங்கக்கூட ஷேர் பண்றதுக்குத்தான், இந்த வீடியோனு சொல்லி, பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கின் போது எடுத்த வீடியோவை காட்டுகிறார்.
வீடியோ ஆரம்பாகும் போதே, பாரதியின் அம்மாவாக நடிக்கும் ரூபாவை நிஷா வச்சு செய்ய, பிறகு கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா’ நிஷாவுக்கு மேக்கப் போட்டு விடுகிறார். உடனே அங்கிருக்கும் பெண்கள், நயன்தாரா மாதிரி நிஷாவுக்கு உதட்டுக்கு மேல மச்சம் விடுங்க என சொல்ல, உடனே வினுஷா’ அதற்கு நயன்தாரா மாதிரி இருக்கணுமே என கவுண்டர் கொடுக்கிறார்.
இதை தாங்கமுடியாத நிஷா’ உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஏர்போர்ட்-ல ஒருதடவை’ விக்னேஷ் சிவன் நான் தான் நயன்தாரானு நினைச்சி, மாத்தி என்னைய கூப்பிட்டு போயிட்டாரு தெரியுமா? என சொல்ல அதுக்கு வினுஷா ஆங்கிலத்தில் ஏதோ கவுன்டர் அடிக்க’ நிஷா என்னம்மோ சொன்னா.. அது மட்டும் தெரியுது என சிரிக்கிறார்.
பிறகு அந்த குட்டி பொண்ணு லட்சுமியையும் விட்டு வைக்காமல் நிஷா கலாய்க்கிறார்.
பதிலடியாக, குட்டி லட்சுமியும் நிஷாவை பார்த்து, நயன்தாரா என அழைக்க’ நிஷா மகிழ்ச்சியில் பூரிக்க, உடனே’ லட்சுமியும் நிஷா வயிற்றில் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
பிறகு நிஷா, யூடியூப்- ல் வரும் வீடியோவை போல, செளந்தர்யா, கண்ணாம்மாவ பார்த்து, இவங்க எவ்ளோ வாங்குறாங்க சம்பளம் தாராங்க தெரியுமா? அந்த மாமியாருக்கு ஒரு லட்சம் தராங்களாம். கண்ணம்மாவுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் தாராங்களாம் என பயங்கரமாக அல்லப்பறை செய்கிறார்.
செட்டில் போடும் சாப்பாட்டை நல்ல அடித்து நொறுக்கும் நிஷா, ஷூட்டிங் போது, தான் நடிக்கும் வீடியோக்களையும் காட்டுகிறார்.
ஒருவழியாக ஷூட்டிங் முடிந்து’ இரவு ஒரு மணிக்கு வீட்டுக்கு போன நிஷா’ நான் ஃபீல் பண்றது என்னென்னா, கண்ணம்மா வினுஷா.. மாமியார் ரூபா அம்மா, குழந்தைங்க, பிரதீப் சார் வேற லெவல் கேரெக்டர் . முழு டீம்-ஏ’ ரொம்ப பாசிட்டிவ்வா இருக்கும் என சொல்லி வீடியோவை முடிக்கிறார். இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“