குருநாதரின் மகனை ஹீரோவாக்கும் கே.எஸ். ரவிக்குமார்
இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கே.எஸ்.ரவிக்குமார். பின்னர் அவரும் இயக்குனராகி ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி ஹீரோக்களையும் வைத்து படங்களை இயக்கி விட்டார். சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கே.எஸ். ரவிக்குமார் தற்போது கூகுள் கூட்டப்பா என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இப்பட விழாவில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், கூகுள் கூட்டப்பா படத்தை அடுத்து புதுமுக இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார். அதோடு அந்த படத்தில் தனது குருநாதர் விக்ரமனின் மகன் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதையும் தெரிவித்த கே.எஸ். ரவிக்குமார், அந்த படம் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாகவும் கூறினார்.