மாண்டியா, : ”முதல்வர் பசவராஜ் பொம்மை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ‘கூல் கேப்டன்’ தோனியை போன்றவர்,” என்று மாண்டியா தொகுதி சுயேச்சை எம்.பி.,சுமலதா கூறினார்.மாண்டியாவின் பாண்டவபுரா அருகே உள்ள மேலுகோட்டேயில் நடக்கும் வைரமுடி திருவிழாவில் நேற்று எம்.பி., சுமலதா பங்கேற்றார்.
அவர் கூறியதாவது:பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்ற பின், ஆறு மாத காலத்தில் பல முறை அவரை சந்தித்துள்ளேன். அப்போது அவர் பல்வேறு விஷயங்களை ஒரே கடிதத்தில் தருகிறீர்கள் அல்லவா என்பார்; எல்லாவற்றையும் பொறுமையுடன் ஆய்வு செய்வார்.இந்த வகையில் அவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ‘கூல் கேப்டன்’ தோனியை போன்றவர்.மாண்டியா மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து எந்த விஷயத்தை கொண்டு சென்றாலும் அவர் இல்லை என சொல்வதில்லை. இங்கு இரண்டு சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டிருந்தன.அதில் பி.எஸ்.எஸ்., ஆலையை மீண்டும் ஆரம்பித்தார். தற்போது, மை சுகர் ஆலை ஆரம்பிக்கப்பட உள்ளது. மாண்டியாவின் சுற்றுலாவை மேம்படுத்த அவர் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement