இயக்குநர் ராஜமெளலியின் அடுத்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இணைகின்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ராம் சரண் – ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ வரும் மார்ச் 25 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’ வரும் மே 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இப்படத்தை அடுத்து ராஜமெளலியுடன் மகேஷ் பாபு இணைகிறார். தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமெளலி அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, ‘புஷ்பா’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இந்த ஆண்டு இறுதிக்குள் ‘புஷ்பா 2’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் வெளியானதும் ராஜமெளலி-மகேஷ் பாபு படம் நிறைவடைந்ததும் ராஜமெளலி – அல்லு அர்ஜுன் முதன்முறையாக இணைகின்றனர். இதற்கான, பேச்சுவார்த்தை முடிந்து விட்டது என்றும் சொல்லப்படுகிறது. பான் இந்தியா இயக்குநராக ராஜ மெளலியும், பான் இந்தியா நடிகராக அல்லு அர்ஜுனும் வெற்றி பெற்றுள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.