வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற கீழ் சபையில் குடியரசுக் கட்சி எம்.பி. லிண்ட்சே கிரகாம் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.
ரஷிய அதிபர் புதினை ஒரு போர் குற்றவாளி என்று கண்டிக்கும் அந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. இந்த தீர்மானத்துக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றாகவே ஆதரவு தெரிவித்தன.
ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் சக் ஷுமர் இதுபற்றி கூறும்போது, ‘‘உக்ரைன் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு புதின் பொறுப்பு ஏற்பதில் இருந்து தப்பிக்க முடியாது என்று இரு கட்சியினரும் ஒன்றிணைந்து தெரிவித்து இருக்கிறோம்’’ என்றார்.