உக்ரைன் இந்த ஐரோப்பிய நாடு போல் மாறினால்… போர் முடிவுக்கு வரும்! ரஷ்ய அறிவிப்பு


 பிரபல ஐரோப்பிய நாடான ஆஸ்தியா போல் உக்ரைன் மாறினால், போர் முடிவுக்கு வரும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov கூறியதாவது, ஆஸ்திரியாவை போல் உக்ரைனை ராணுவமற்ற நாடாக ஆக்குவது, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமரசமாக கருப்படலாம்.

இதுகுறித்து பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டு வருகிறது, இது உண்மையில் சமரசமாக பார்க்கப்படும் என கூறினார்.

ரஷ்யா எதிர்பார்க்கும் ‘ராணுவமற்ற’ நிபந்தனைகள் என்ன என்பது தற்போது வரை தெளிவாக தெரியவில்லை.

ஆனால், உக்ரைனிடம் ராணுவ படைகள் இருந்தாலும், அது நடுநிலை வகிக்க வேண்டும் என ரஷ்யா எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

ஆஸ்திரியாவும் சொந்த ராணுவ படைகளை கொண்டுள்ளது, ஆனால் 1955 ஆம் ஆண்டு ஆஸ்திரிய அரசு ஒப்பந்தம் மற்றும் அதன் அரசியலமைப்பின் மூலம் நடுநிலைக்குக் கட்டுப்பட்டது.

இது ராணுவக் கூட்டணிகளில் இணைவதையும், ஆஸ்திரிய பிரதேசத்தில் வெளிநாட்டு ராணுவ தளங்களை நிறுவுவதையும் தடை செய்கிறது.

இதேபோன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டால், உக்ரைன் நேட்டோவில் சேர முடியாமல் போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.