போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள், துணைப் பிரதமர் ஆகியோர் உக்ரைன் தலைநகர் கீவுக்கு திடீரென வருகை தந்தனர். அங்கு வைத்து உக்ரைன் மக்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம் என்று செய்தியாளர்களுக்கு அவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 20 நாட்களாகி விட்டது. ஆனால் இன்னும் தீர்வு கிடைத்தபாடில்லை. உக்ரைனும் பெரிதாக இறங்கி வரவில்லை, ரஷ்யாவும் தனது போரை நிறுத்துவதாக இல்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
“No war”.. ரஷ்யப் பெண்ணை 14 மணி நேரம் துருவித் துருவி விசாரித்த அதிகாரிகள்!
இந்த நிலையில் போலந்து நாட்டு பிரதமர் மடியூஸ் மொராவிசிக்கி, துணை பிரதமர் ஜரஸ்லோ கக்சின்ஸ்கி, ஸ்லோவேனியா நாட்டு பிரதமர் ஜானஸ் ஜன்சா, செக் நாட்டு பிரதமர் பீட்டர் பியலா ஆகியோர் கீவ் நகருக்கு திடீரென கிளம்பி வந்தனர். அங்கு வைத்து உக்ரைன் மற்றும் பால்டிக் நாடுகளின் வரைபடத்தை வைத்துக் கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர்
உக்ரைன் அதிபர்
ஜெலன்ஸ்கி உள்ளிட்டோருடனும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதுதொடர்பாக மடியூஸ் மொராவிசிக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,, இன்று உக்ரைன், நேற்று ஜார்ஜியா, அடுத்து பால்டிக் நாடுகள் என ரஷ்யாவின் வெறிப் போர் தொடரும் அபாயம் உள்ளது. போலந்தையும் அவர்கள் தாக்கக் கூடும்.
ஜார்ஜியாவில் 14 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது ஜார்ஜிய மக்கள் காட்டிய உறுதியும், மன வலிமையும் உலக அளவில் பேசப்பட்டது. இன்று வரை ஜார்ஜிய மக்கள் அதே உறுதியோடு உள்ளனர். அவர்கள் காட்டிய வீரமும், தீரமும் மறக்க முடியாதது.
அடி தாங்க முடியலை குருவே.. “நேட்டோ”வே வேண்டாம்.. இறங்கி வரும் உக்ரைன்!
அதே அளவிலான வீரத்தையும், தீரத்தையும் இன்று உக்ரைனியர்கள் காட்டிக் கொண்டுள்ளனர். அதேசமயம் இந்த மக்களுக்கு உலக நாடுகள் துணை நிற்க வேண்டும். இந்த நாட்டின் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். அமைதியான உலகில் அவர்கள் வாழ வேண்டும். சர்வாதிகார உலகின் வல்லாதிக்கத்திலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும்.
கொடூரமான சர்வாதிகாரத்தின் விளைவுதான் இந்தப் போர். அப்பாவி மக்களை குண்டு வீசிக் கொன்று வருகிறார்கள். உலகம் தனது பாதுகாப்பு உணர்வை இழந்து விட்டது. அப்பாவி மக்களின் உயிர் குடித்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. இதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். எங்களது ஒற்றுமையையும், ஆதரவையும் காட்டவே கீவ் நகருக்கு வந்தோம் என்று கூறியுள்ளார்.
3 நாட்டுத் தலைவர்கள் உக்ரைனுக்கு வந்து அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது பலரின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. பிற ஐரோப்பிய தலைவர்களும் இதுபோல உக்ரைனுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியுள்ளது. அதேசமயம்,எத்தனை தலைவர்கள் வந்தாலும் நேட்டோ அமைப்பில் சேர மாட்டோம் என உக்ரைன் பகிரங்கமாக அறிவித்தால் மட்டுமே ரஷ்யா தனது போரை நிறுத்தும் என்பது நிதர்சனம்.