பெங்களூரு : குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே டிக்கெட் அளிக்க பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. இதனால், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் டிக்கெட் எதிர்பாப்பாளர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் பா.ஜ., நான்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு டிக்கெட் மற்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு என்ற ‘பார்முலா’ கடைபிடிக்கப்பட்டது.
அதன்படி உத்தர பிரதேசத்தில் 89, உத்தரகண்டில் 55 புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கோவாவில் முன்னாள் முதல்வரின் மகனுக்கே டிக்கெட் வழங்கப்படவில்லை.இது தேர்தலில் நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. இதே பார்முலாவை கர்நாடகாவிலும் கடைபிடிக்க மேலிட தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் குற்றச்சாட்டு உள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு பதில், புது முகங்களுக்கு வாய்ப்பு தரப்பட உள்ளது. வரும் 2023 பொதுத்தேர்தலில் அமல்படுத்தபட உள்ளது.நடப்பு எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் மகன், சகோதரர், மைத்துனருக்கு இந்த முறை எப்படியும் டிக்கெட் வாங்கி விட வேண்டும் என காத்திருக்கும் பிரமுகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.குடும்ப அரசியலை ஒழிக்கவே, புதிய விதிமுறை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.
Advertisement