சென்னை
பாஜக தலைவ்ர் அண்ணாமலை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்துப் புரிதல் இல்லாமல் விமர்சித்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எண்ணூர் அனல் மின் நிலையம் விரிவாக்கம் குறித்து சமீபத்தில் விமர்சனம் எழுப்பி இருதார். இது அரசியல் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அப்போது அவர்,
“பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்துப் புரிதலில்லை. அதனால் அவர் அரசுக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் விமர்சித்து உள்ளார்.கடந்த 2006 செப்டம்பரில் தொடங்கிய பணிகள் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் முடியாமல் இருந்தன.
அவர் குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பாக அதன் முழு விபரங்களையும் தெரிந்துகொள்வது அவசியம். கடந்த 2020ல் மின்திட்டங்களுக்கு வைப்பு தொகை 3% என மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. தற்போது 2019-ல் போடப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படியே ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் பற்றி 24 மணி நேரத்தில் தெளிவுபடுத்த வேண்டும். அவர் கூறிய புகாரை நிரூபிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மின்வாரிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை நன்கு அறிந்த பின்னரே விமர்சிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லாத அளவிற்குச் சீரான மின் விநியோகம் நடைபெறுகிறது”
எனத் தெரிவித்துள்ளார்.