பூகோள அமைப்புரீதியாகவே நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது. அங்கு அவ்வபோது நிலநடுக்கம் ஏற்படுவதை கருத்தில் கொண்டே அதனால் உயிர்சேதம் ஏற்படாதவண்ணம் வீடுகள் கட்டப்பட்டிருக்கும்.
நிலநடுக்கம் தொடர்பான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டால் தங்களது உயிரையும், உடைமைகளையும் எப்படி காப்பாற்றி கொள்வது என்பது குறித்து அந்நாட்டு மக்களுக்கு அரசு பயிற்சியும் அளித்து வருகிறது.
நிலநடுக்கம் ஜப்பானியர்களுக்கு பழக்கமான ஒன்றுதான் என்றாலும், ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும்போதும் ரிக்டர் அளவுகோலில் அது எந்த அளவு பதிவாகி என்பதுதான் விஷயம்.
புதினை வம்புக்கிழுத்த அமெரிக்கா… இப்படியா தீர்மானம் நிறைவேற்றுவது?
அந்த வகையில் ஜப்பானியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, இன்று அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தலைநகர் டோக்கியோவுக்கு வடகிழக்கு பகுதியை மையமாக கொண்டு இன்றிரவு 9 மணியளவில்( இந்திய நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது.
இந்த அதிர்ச்சியில் இருந்து அந்நாட்டு மக்கள் மீள்வதற்குள் அடுத்த 2 நிமிட இடைவெளியில், கடற்பகுதியை மையமாக கொண்டு மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக ஜப்பானில்
சுனாமி எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.