மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யா மீது படையெடுக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றிய பின்னர் பேசிய ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ரஷ்யாவை அழிக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கிறது. மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளுக்கு பின்னால் விரோதமான புவிசார் அரசியல் குறிக்கோள்கள் இருக்கின்றன.
உலகளாவிய மேலாதிக்கத்தை அடைவதற்கும், ரஷ்யாவைத் துண்டாக்குவதற்கும் மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டு வரும் முய்றிசி வெற்றியடையாது.
வலுவான மற்றும் இறையாண்மை கொண்ட ரஷ்யாவை அவர்கள் விரும்பவில்லை.
மேற்கத்திய சக்திகளின் ஆதரவுடன் ரஷ்யாவிற்கு எதிரான படையெடுப்புக்கு உக்ரைன் திட்டமிட்டுள்ளது.
‘ரஷ்யா எதிர்ப்பு’ அலை ஒன்றை உருவாக்க மேற்கத்திய சக்திகள் விரும்புகிறது, உக்ரைன் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.
ஆயுதங்களை வழங்குவதன் மூலம் உக்ரைனை மோதலை தொடர மேற்கத்திய நாடுகள் தள்ளுகிறது என்று புடின் தெரிவித்துள்ளார்.