புதுடெல்லி:
2022-ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம் மற்றும் எம்3எம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டன.
இதில் இந்தியாவின் முகேஷ் அம்பானி சுமார் ரூ.7.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 9-ம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்திலும், அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் இரண்டாமிடமும் பிடித்துள்ளனர்.
சீரம் மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனாவாலா, டிமார்ட் நிறுவனர் தமானி, லட்சுமி மிட்டல் ஆகியோர் உலக பணக்காரர்கள் 100 பேரில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளனர்.
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக சுமார் 6 லட்சம் கோடி ரூபாயயுடன் அதானி 2ம் இடம் பிடித்துள்ளார். ரூ.2 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
இதையும் படியுங்கள்…கோவா, மணிப்பூர் முதல்வர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு