புதுடெல்லி: `ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவு சரியானது. இதில் அரசியலமைப்பு ரீதியாக எந்த குறைபாடும் இல்லை,’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்பது ஒரே பதவியில் பணி ஓய்வு பெறும் ராணுவ வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்குவதை நோக்கமாக கொண்டது. இதனை எதிர்த்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சங்கத்தின் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், பதவியை மட்டும் ஓய்வூதியத்திற்கான அளவு கோளாக எடுத்து கொள்ளாமல், சேவை காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதி டிஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, `ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற ஒன்றிய அரசின் கொள்கை முடிவு தன்னிச்சையானது அல்ல. அரசின் கொள்கை முடிவுகளை ஆராய்வது நீதிமன்றத்தின் வேலையும் அல்ல. அரசியலமைப்பின்படி, இத்திட்டம் அரசு கொள்கை வகுப்பதற்கான அதிகார வரம்பிற்குள் உள்ளது’ எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.