உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ தளவாடங்கள் வழங்கும் ஆணையில் அதிபர் பைடன் கையெழுத்திட்டார்.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள உக்ரைனுக்கு நவீன ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர் மதிப்பில் நவீன போர் ஆயுதங்களை வழங்க அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.
தொலைதூர விமான எதிர்ப்பு உள்ளிட்ட ஆயுதங்களை அதிகளவில் உக்ரைனுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.