Japan Earthquake: ஜப்பான் நிலநடுக்கத்தில் இருவர் பலி 94 பேர் காயம்

டோக்கியோ: ஜப்பானில் ஏறபட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர், 94 பேர் காயமடைந்தனர்

புகுஷிமா மற்றும் மியாகி மாகாணங்களின் கரையோரங்களில் சுனாமி ஏற்படுவதற்கான ஆலோசனையை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இன்று காலையில் நீக்கியது.

ஜப்பானில் (2022, மார்ச் 16) அன்று ஏற்பட்ட பூகம்பத்தில்  2 பேர் கொல்லப்பட்டனர், 94 பேர் காயமடைந்தனர். ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஃபுகுஷிமா கடற்கரையில் புதன்கிழமை இரவு 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும் படிக்க | ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை

புகுஷிமா பகுதியில் இருக்கும் கடலில் சுமார் 60 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜப்பான் நேரப்படி இரவு 11.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

கடல் பகுதிகளில் ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பின சுமார் இரண்டு மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.

இதில் தளபாடங்கள் உடைந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நிலநடுக்கத்தை அடுத்து, கடலில் அலைகள் அதிகரித்ததால் சிறிய அளவிலான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

சுனாமி எச்சரிக்கை இன்று (2022, மார்ச் 17 வியாழன்) காலை நீக்கப்பட்டது. இப்பகுதி வடக்கு ஜப்பானின் ஒரு பகுதியாகும், 11 ஆண்டுகளுக்கு இதே பகுதியில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பேரழிவு ஏற்பட்டது. 

அந்த கோரமான பேரழிவின்போது, அணு உலை உருகியது, அதிலிருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சின் தாக்கம் இன்னும் தொடர்கிறது. சில பகுதிகளை மக்கள் வாழ முடியாததாக ஆக்கியது.

இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து, புகுஷிமா அணுமின் நிலையம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.