அதிபர் புதினை முதன்முறையாக போர்க்குற்றவாளி என விமர்சித்த ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என்று விமர்சனம் செய்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், புதினை ஒரு போர்க்குற்றவாளி என தான் நினைப்பதாகக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்ய அதிபரை, அமெரிக்க அதிபர் விமர்சனம் செய்தது மன்னிக்க முடியாத வார்த்தைகள் என்று கூறினார்.

இதுவரை புதினைப் பற்றி கருத்துத் தெரிவிக்காமல் இருந்த அமெரிக்க அதிபர் தற்போது கடும் விமர்சனம் கூறியிருப்பது சர்வதேச அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.