ஜப்பானின் வடக்கில் புகுஷிமா கடற்பகுதியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே நேற்று இரவு 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 60 கிலோமீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவைக்கொண்டதாக பதிவாகியுள்ளது
நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள புல்லட் ரெயில்கள் தடம் புரண்டன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் புகுஷிமா பகுதியே குலுங்கியது. ஜப்பானின் கிழக்கு பகுதியிலும் குறிப்பாக தலைநகர் டோக்கியோவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. சுமார் இரண்டு மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன..
இருவர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.