கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்த ஒரு தியேட்டரை ரஷ்யப் படையினர் குண்டு வீசி தகர்த்துள்ளனர். இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவில்லை. ரஷ்யாவின் இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை மறக்க மாட்டோம் என்றும் அது ஆவேசமாக கூறியுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா மேலும் மேலும் தீவிரப்படுத்திக் கொண்டே போகிறது. போரை நிறுத்தும் எண்ணத்திலேயே அது இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்தாலும் கூட அதை ரஷ்யா கண்டு கொள்ளவில்லை. மாறாக தொடர்ந்து தனது அதிரடித் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரில் கடும் தாக்குதலை நடத்தியுள்ளது ரஷ்யா. அங்குள்ள ஒரு தியேட்டரில்
குண்டு வீசித் தாக்குதல்
நடத்தியுள்ளனர் ரஷ்யப்படையினர். அத்தியேட்டரில் 1000க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. இருப்பினும் தாக்குதல் நடந்தபோது எத்தனை பேர் அங்கிருந்தனர் என்பது தெரியவில்லை. குண்டு வீச்சில் தியேட்டர் முற்றிலும் சீரழிந்து விட்டது. எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதும் சரியாக தெரியவில்லை.
“மேப்”பும் கையுமாக கிளம்பி வந்த.. 3 நாட்டு தலைவர்கள்.. ஜெலன்ஸ்கியுடன் தீவிர ஆலோசனை!
மரியுபோல் நகரில் போர் தொடங்கியது முதல் இதுவரை 2400 பேர் வரை உயிரிழந்திருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் உண்மையான பலி எண்ணிக்கை இதை விட அதிமாகவே இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மரியுபோல் நகரில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களுக்கு குடிநீர், மின்சாரம், உணவு என எதுவுமே கிடைக்காத நிலையும் காணப்படுகிறது.
மரியுபோல் நகர தியேட்டர் மீதான தாக்குதல் குறித்து உள்ளூர் நகராட்சி நிர்வாகம் கூறுகையில், இந்த தியேட்டரில் சிறார்கள் பலரும் தஞ்சமடைந்திருந்தனர். இதனால் தியேட்டருக்கு அருகே பிரமாண்ட எழுத்துக்களில் குழந்தைகள் என்று ரஷ்ய மொழியில் எழுதி வைத்திருந்தோம். ஆனால் இதைப் பார்த்தும் கூட ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது மனிதாபிமானமற்றது. வேண்டும் என்றே விஷமதத்தனமாக இதை செய்துள்ளது ரஷ்யா. விமானம் மூலம் இந்த குண்டுவீச்சை நிகழ்த்தியுள்ளனர்.
“No war”.. ரஷ்யப் பெண்ணை 14 மணி நேரம் துருவித் துருவி விசாரித்த அதிகாரிகள்!
இதற்கிடையே குண்டு வீச்சு நடந்த தியேட்டர் குறித்த செயற்கைக் கோள் படத்தை அமெரிக்காவின் மக்ஸார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தத் தாக்குதலில் தங்களது நாட்டுப் படையினர் ஈடுபடவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஆனால் டோனெட்ஸ்க் பிராந்திய ராணுவ நிர்வாக தலைவர் பாவ்லோ கிரிலென்கோ சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில்
மரியுபோல் தியேட்டர்
தாக்குதலுக்கு முன்பும், தாக்கப்பட்ட பிறகும் உள்ள காட்சிகள் உல்ளன. அதேபோல அந்த தியேட்டர் மீதான தாக்குதல்தொடர்பான வீடியோவையும் அவர் டெலிகிராமில் வெளியிட்டுள்ளார். வேண்டும் என்றே ரஷ்யப்படையினர் அப்பாவி பொதுமக்களை குறி வைத்துத் தாக்குவதாக கிரிலென்கோ குற்றம் சாட்டியுள்ளார்.