சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வருகிற 21ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் காத்தலிங்கம் அறிவித்துள்ளார். இச்சங்கத்தின் கீழ் 300பட்டாசு ஆலைகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு உற்பத்தியில் 80 சதவீத பங்கு வகிக்கும் பேரியம் நைட்ரேட் மூலப்பொருளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பட்டாசு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி பட்டாசு தயாரிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM