3 படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த
ஐஸ்வர்யா
ரஜினிகாந்த், 9 ஆண்டுகளாக எதையும் இயக்கவில்லை. இந்நிலையில் அவர் முசாபிர் என்கிற காதல் பாடல் வீடியோவை இயக்கியிருக்கிறார்.
ஒரேயொரு பாடல் கொண்ட வீடியோவை ஐஸ்வர்யா இயக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும். அந்த பாடல் வீடியோ இந்தி தவிர்த்து தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வருகிறது.
இந்நிலையில் ஐஸ்வர்யாவின் இந்த முயற்சி வெற்றி பெற நடிகர்கள்
ராணா
,
துல்கர்
சல்மான், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஐஸ்வர்யா ஒரு திறமைசாலி. அவர் இத்தனை ஆண்டுகளாக சும்மா இருந்திருக்கக் கூடாது என்பதே அவர்களின் ஆதங்கம். இனி நிறைய படங்கள், பாடல் வீடியோக்களை ஐஸ்வர்யா இயக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
கேப் விடாதீங்க ஐஸ்வர்யா, லாட்ஸ் ஆஃப் லவ் டு யு: இளம் ஹீரோ
ஐஸ்வர்யாவின் புது காதல் முயற்சிக்கு ஸ்டேட் விட்டு ஸ்டேட் ஆதரவு வந்து கொண்டிருக்கிறது. மேலும் தங்கள் ரசிகர்களை ஐஸ்வர்யாவுக்கு ஆதரவு அளிக்குமாறு ராணாவும், துல்கர் சல்மானும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உடல்நலம் சரியில்லாத நேரத்தில் ஐஸ்வர்யா செய்த இந்த காரியம் நிச்சயம் வெற்றி பெறும். நாங்கள் இருக்கிறோம் அண்ணி என தனுஷ் ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.