ஜேர்மன் இளவரசர் ஒருவர், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், கூட்டத்தில் ஒருவராக நின்று உக்ரைனிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு உதவுவது குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
Heinrich Donatus (27), ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர். ஜேர்மனியின் Schaumburg-Lippe என்ற பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரையில் வந்தவர் அவர். முதல் உலகப்போருக்குப் பின் மன்னராட்சி ஒழிக்கப்படுவது வரை, அவரது முன்னோர்கள் அந்த பகுதியை ஆண்டு வந்துள்ளார்கள்.
ஆக, ஒரு இளவரசராக இருந்தும், தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல், போலந்து எல்லையில் தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நின்று, உக்ரைனிலிருந்து அகதிகளாக வரும் அந்நாட்டவர்களுக்கு உதவி வருகிறார் Heinrich Donatus.
முதலில் எல்லையில் தன் குழுவினருடன் தங்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி செய்து வந்த Heinrich, பின்னர், அந்த ஆம்புலன்ஸ் Kyivக்கு தேவைப்படும் என்று, அதை உக்ரைனியர்களிடமே கொடுத்துவிட்டார்.