சென்னை: தமிழகத்தில் 17 காவல் துறை ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தென் மண்டல ஐஐியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 17 காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தென் மண்டல ஐஐியாக அஸ்ரா கார்க், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக அன்பு, வடக்கு மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்னர்.
> மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பிய ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க், தென் மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
> தென் மண்டல ஐஜியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி அன்பு, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
> மதுரை காவல் ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா, வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
> வடக்கு மண்டல ஐஜியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் குமார், நெல்லை மாநகர ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
> சென்ன வடக்கு சட்டம் – ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி செந்தில்குமார், மதுரை மாநகரா காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
> நெல்லை காவல் ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.டி.துரை குமார், அமலாக்கத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
> ஐபிஎஸ் அதிகாரி மல்லிகா, காவல்துறை விரிவாக்கப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
> ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், காவல்துறை நலன்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
> மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை ஐஜி துரைக்குமார் பதவி உயர்வு பெற்று ரயில்வே காவல்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
> ஐபிஎஸ் அதிகாரி பாலநாகதேவி, காவல்துறை செயலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
> ஐபிஎஸ் அதிகாரி ஜெயராம், ஊர்க்காவல் படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
> ஐஜி அபின் தினேஷ் மொடக் பதவி உயர்வு பெற்று பொருளாதார குற்றப்பரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
> சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஐஜி செந்தாமரைக் கண்ணன் பதவி உயர்வு பெற்று அதே துறையின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
> ஊர்க்காவல்படை ஐஜி வனிதா, பதவி உயர்வு பெற்று ரயில்வே காவல்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.