உலக அழகி போட்டி : 2 வது இடத்தை பிடித்த அமெரிக்க இந்திய அழகி

போர்ட்டோ ரிக்கோ,
கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020 ஆம் நடைபெற இருந்த உலக அழகி  (மிஸ் வேர்ல்ட்) போட்டி  கடைசி நிமிடத்தில் ரத்து செய்யபட்டது.நீண்ட இடைவெளிக்கு பிறகு போர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுவானில் உலக அழகி போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்காவா , 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தட்டி சென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய-அமெரிக்கரான ஸ்ரீ சைனி இரண்டாவது இடத்தையும், கோட் டி ஐவரியைச் சேர்ந்த ஒலிவியா யேஸ் 3-வது இடத்தையும் பிடித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.