தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றிய அனிருத்
தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார் அனிருத். தற்போது அவரது இசையில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது.
அதோடு தெலுங்கில் ஜெர்சி, அஞ்ஞாதவாசி, கேங்க்லீடர் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நட்பு பாடலின் தமிழ்ப்பதிப்புக்கு பின்னணி பாடியிருந்தார். இந்தநிலையில், அடுத்தபடியாக என்டிஆரின் 30வது படம் மற்றும் ராம்சரண், விஜய் தேவரகொண்டா ஆகிய முன்னணிதெலுங்கு ஹீரோக்களின் புதிய படங்களில் இசையமைப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறாராம். அதனால் இந்த படங்கள் வெளி யாகும்போது தமிழைப்போலவே தெலுங்கிலும் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் அனிருத் இணைந்து விடுவார் என்று தெரிகிறது.