காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
இயக்கியிருக்கும்
பயணி
காதல் பாடல் வீடியோ இன்று மாலை 4.44 மணிக்கு வெளியிடப்படுகிறது.
ஐஸ்வர்யாவின் புது காதலுக்கு பெருகும் ஆதரவு: அடடே இவருமா!!!
அந்த வீடியோவை கண்டிப்பாக பார்த்து ஐஸ்வர்யாவுக்கு ஆதரவு அளிக்குமாறு சிரஞ்சீவி, ராணா, துல்கர் சல்மான், குஷ்பு, யுவன் ஷங்கர் ராஜா, சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார், மேனகா சுரேஷ் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
பயணி வீடியோ தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகிறது. இந்நிலையில் பயணி வீடியோவை ரஜினிகாந்த் வெளியிட்டால் நன்றாக இருக்குமே என்றார்கள் ரசிகர்கள்.
அதே சமயம், தனுஷை பிரிந்து வந்துவிட்டதால்
ஐஸ்வர்யா
மீது கோபத்தில் இருக்கும் ரஜினி அந்த செயலை செய்வாரா என்கிற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில் ஐஸ்வர்யாவின் புது முயற்சிக்கு ரஜினியின் ஆதரவு கிடைத்துவிட்டது. பயணி பாடல் வீடியோவை தன் அப்பா வெளியிடுவதாக ட்வீட் செய்துள்ளார் ஐஸ்வர்யா.
இதை விட உங்களுக்கு பெரிய ஆசி கிடைத்துவிட முடியாது ஐஸ்வர்யா. இனி எல்லாம் ஜெயமே என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.