பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சக பள்ளி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் ஆத்தூர் பூலாம்பாளையம் பகுதியில் 16 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் புதூர் பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவருடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
மிகவும் நெருக்கமாக பழகிய இவர்கள் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து தற்போது அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.