இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு திரு. மஜித் மொஸ்லே, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இந்த சந்திப்பு ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (மார்ச், 16) இடம்பெற்றது.
பாதுகாப்புச் செயலாளர் மற்றும் எகிப்து தூதுவர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வினை நினைவுகூரும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் எகிப்து தூதுவர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
கொவிட் – 19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டலுக்கு அமைய இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.