கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜாம்ஷெட்பூர் (13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி), ஐதராபாத் (11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி), ஏ.டி.கே.மோகன் பகான் (10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி), கேரளா பிளாஸ்டர்ஸ் (9 வெற்றி, 7 தோல்வி, 4 டிரா) ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
அரைஇறுதியில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு எதிரான அணியுடன் 2 முறை மோத வேண்டும். இதன் முடிவில் அதிக வெற்றி அல்லது கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
அதன்படி கேரளா – ஹைதராபாத் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன .
வரும் 20-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெறும் இறுதி போட்டியில் கேரளா மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹைதராபாத் அணி ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்