நடிகர்
தனுஷ்
மற்றும்
ஐஸ்வர்யா
பிரிந்தது அவர்களை மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினரையும் பாதித்துள்ளது. இவர்களின் பிரிவினால் மனமுடைந்த
ரஜினி
தற்போதுதான் கொஞ்சம் தெரியுள்ளார்.
கவலையை மறந்து தற்போது தன் அடுத்த படவேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றார். மேலும் தனுஷின் தந்தை
கஸ்தூரி ராஜா
இவர்களை சேர்த்து வைக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
ஐஸ்வர்யாவை ‘அப்படி ‘ குறிப்பிட்டு ட்வீட் போட்ட தனுஷ்…ஷாக்கான ரசிகர்கள்..!
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிள்ளைகளின் நலனுக்காக இவர்கள் மீண்டும் சேரவேண்டும் என்பது இவர்களது குடும்பத்தினரின் விருப்பம். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்தார்களே தவிர அதிகாரபூர்வமாக விவாகரத்து பெறவில்லை.
தனுஷ்
எனவே இவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு அதிகம் என பலரும் பேசிவந்தனர். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாது இவர்கள் இருவரும் தங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கிய பயணி எனும்
ஆல்பம்
பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகரும் ஐஸ்வர்யாவின் தந்தையுமாகிய ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார். மேலும் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களும் ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடலுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தனுஷ்
இதைத்தொடர்ந்து தனுஷும் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது தற்போது செம வைரலாகிவருகின்றது. ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டு தனுஷ் தன் வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டதால் இனி இவர்கள் சேருவார்கள் என்று கருதியவர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது. குறிப்பாக இவர்களை சேர்த்து வைக்க பல முயற்சிகளை எடுத்துவரும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிற்கு இந்த ட்வீட் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தனுஷின் மீது கஸ்தூரி ராஜா உச்சகட்ட கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தியேட்டரில் COMEBACK கொடுப்பாரா சூர்யா?