பி.எஸ்.பி அதன் மோசமான செயல்திறனால், உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் ஒரு இடம் மட்டுமே பெற்றதில் இருந்து பி.எஸ்.பி தொடர்ச்சியாக கட்சியில் மாற்றங்களைச் செய்து, உயர் சாதியினருக்கு தனது வேண்டுகோளை விரிவுபடுத்தும் உத்தியிலிருந்து விலகி, மாயாவதி தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது. மருமகனும் கட்சியில் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மோசமான செயல்பாட்டிற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுவது, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதன் மிகக் குறைவான மற்றும் அலட்சியப் பிரச்சாரம்தான் என்றாலும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத் தேர்தல்களுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் பி.எஸ்.பி ஏற்கனவே தயாராகி வருவதாக கட்சித் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டே மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று அக்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
அந்த மாற்றங்களில் ஒன்று, பகுஜன் சமாஜ் கட்சி அழிந்துவிடும் என்று கூறும் கருத்துக்கணிப்புகளுக்கு மத்தியில், மாயாவதியின் சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்த் கட்சியின் ஒரே தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு, மற்ற தேசிய ஒருங்கிணைப்பாளரான ராஜ்யசபா உறுப்பினர் ராம்ஜி கெளதமை 8 மற்ற 8 மாநிலங்களின் பொறுப்பாளராக மாற்றியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத் தலைவராக மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
55 வயதான குமார், மாயாவதியின் இளைய சகோதரர், 2017 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதன்முதலில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். உத்தரப் பிரதேசத்தில், பி.எஸ்.பி தொடர்ந்து இரண்டாவது தேர்தலில் தோல்வியடைந்தது. மே, 2019-இல், தனது குடும்பத்தினருக்கு பதவிகளை வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக மாயாவதி தனது ராஜினாமாவை அறிவித்தார். ஒரு மாதத்திற்குள் அவர் தேசிய ஒருங்கிணைப்பாளராக அவருடைய சகோதரரின் மகன் ஆகாஷை 28 வயதில் மீண்டும் நியமித்தார்.
குறிப்பாக தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை கட்சிக்கு அழைத்து வரும் பொறுப்பு ஆகாஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
குமாரின் மூன்று பிள்ளைகளில் மூத்தவரான ஆகாஷின் பதவி உயர்வை குறிக்கிறது இது. ஆகாஷ் 2017-இல் அரசியல் காட்சிகளில் முதன்முதலில் அறிமுகமானார். மாயாவதி அப்போது அவரை லண்டனில் இருந்து திரும்பிய எம்.பி.ஏ பட்டம் பெற்ற, கட்சியைக் கவனிக்கும் ஒருவராக அறிமுகப்படுத்தினார்.
அதே நேரத்தில், ரியல் எஸ்டேட் தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு நொய்டாவில் எழுத்தராகப் பணிபுரிந்த 55 வயதான குமாரை மாயாவதி அழைத்து வந்தார்.
2007 மற்றும் 2012-க்கு இடையில் மாயாவதி முதலமைச்சராக இருந்தபோது அவருடைய நிறுவனங்கள் அசாதாரண லாபம் ஈட்டியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2017-இல் வருமான வரித் துறை மற்றும் பிற நிறுவனங்களின் கண்காணிப்பின் கீழ் குமார் வந்த போதிலும் பி.எஸ்.பி தலைவர் அவருடன் தொடர்ந்து இணைந்து இருந்தார்.
ஜூலை 2019 இல், நொய்டாவில் 7 ஏக்கர் வணிக நிலத்தை வருமான வரித்துறை இணைத்துக்கொண்டது. அதன் தற்காலிக மதிப்பு 400 கோடி ரூபாய், இது குமார் மற்றும் அவரது மனைவி விசித்ரா லதா ஆகியோருக்கு சொந்தமானது என்று கூறியது.
குமார் இப்போது கட்சியின் மண்டல பிரிவுகளுடன் ஒருங்கிணைத்து பி.எஸ்.பி நிதிகளை நிர்வகிக்கிறார்.
மூத்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஒருவர் கூறியதாவது: “டெல்லியை தளமாகக் கொண்ட சுமார் 150 இளம் தொழிலாளர்கள் கொண்ட குழுவை ஆகாஷ் வழிநடத்துகிறார். மேலும், அவரது முதன்மைப் பணி இளைஞர்களை பி.எஸ்.பி.-யுடன் இணைப்பதாகும். அவர் கட்சியின் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களையும் கவனிக்கிறார்.
பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் இல்லாத ஆண்டுகளில் பல மூத்த தலைவர்களை, கட்சியின் தொடக்க கால உறுப்பினர்கள் உட்பட பலரை மற்ற கட்சிகளிடம் இழந்த நிலையில், ஆகாஷும் அவரது தந்தை குமாரும் மாயாவதிக்கு அருகாமையில் வளர்ந்துள்ளதாக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
கட்சியில் மற்ற மாற்றங்கள் என்றால், அது பிராமணர்களுக்கான ஆக்ரோஷமான பிரச்சாரம், தேர்தல்களில் எந்த லாபத்தையும் ஈட்டவில்லை என்பதை உணர்ந்ததன் மூலம் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது. அதனால், சிறிய அளவில் தலித் வாக்குகளையும் இழக்க நேரிட்டது. மாநிலத்தில் தலித் மக்கள் தொகை 21% என மதிப்பிடப்பட்டாலும், சமீபத்திய தேர்தல்களில் பி.எஸ்.பி.-யின் வாக்கு வெறும் 12.9% ஆகக் குறைந்துள்ளது.
அந்த எண்ணிக்கை ஜாதவ்களின் தலித் உட்சாதியின் விகிதாச்சாரத்துடன் நெருக்கமாக உள்ளது. சாமர்கள் மற்றும் பாசிஸ் போன்ற பிற குழுக்கள் பாஜக-வுக்கு நகரக்கூடும் என்று பி.எஸ்.பி கவலைப்படுகிறது.
தேர்தலுக்கு முன்னதாக, பி.எஸ்.பி பொதுச் செயலாளரும், கட்சியின் பிராமண முகமாகவும் மாயாவதியின் நம்பிக்கைக்குரியவருமான சதீஷ் சந்திரா மிஸ்ரா உயர் சாதியினரைச் சென்றடைவதற்காக தொடர் சம்மந்தங்களை நடத்தினார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பி.எஸ்.பி அதன் பிராமணத் தலைவரும், அம்பேத்கர்நகரின் எம்.பி.யுமான ரித்தேஷ் பாண்டேவை மக்களவைத் தலைவராக மாற்றி, அவருக்குப் பதிலாக நாகினாவின் தலித் எம்.பியான கிரிஷ் சந்திர ஜாதவ்வைக் கொண்டு வந்துள்ளது. பாண்டேயின் தந்தை தற்செயலாக ஜலால்பூரில் இருந்து சாமாஜ்வாதி வேட்பாளராக வெற்றி பெற்றார். இது அவர் நீக்கப்பட்டதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கிரிஷ் சந்திரா ஜாதவுக்குப் பதிலாக, அசம்கர் மாவட்டத்தில் உள்ள தனித்தொகுதி எம்.பி.யான சங்கீதா ஆசாத், மக்களவையின் புதிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமைக் கொறடாவாகக் கொண்டுவரப்பட்டுள்ளார். கட்சியில் இரண்டு முக்கியப் பதவிகள் இப்போது தலித்துகளால் வகிக்கப்படுகின்றன.
பி.எஸ்.பி தலைவர் ஒருவர் கூறுகையில், மாற்றங்கள் அர்த்தமுள்ளதாக இருக்கிறது: “பிராமணர் மற்றும் க்ஷத்திரிய சமூகங்கள் ஏன் எங்களுக்கு வாக்களிப்பார்கள்? அவர்கள் பா.ஜ.க.வுடன் சேர்ந்துகொள்வார்கள்” என்று கூறினார்.
முஸ்லிம்கள் மீதான உத்தி மாற்றத்தைக் காணும் என்று கூறிய பி.எஸ்.பி தலைவர், “முஸ்லிம்களுக்கு சீட்டு கொடுக்கப்பட்டும் பி.எஸ்.பி.-யால் முஸ்லிம் வாக்குகளை ஈர்க்க முடியவில்லை. எதிர்நிலையாக்குவதைத் தவிர்க்க அகிலேஷ்கூட முஸ்லிம்களைப் பற்றி அமைதியாக இருந்தார். ஆனால், முஸ்லிம்கள் அவருக்கு வாக்களித்தனர். முஸ்லிம் சமூகத்தை சென்றடைய நாங்கள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்.” என்று கூறினார்.
தேர்தலில் போட்டியிட்ட பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில், பி.எஸ்.பி இரண்டிலும் சீட் எண்ணிக்கையில் முன்னேற்றம் கண்டது. ஆனால், வாக்கு சதவீதம் பெரிதாக நகரவில்லை. பஞ்சாபில், அகாலிதளத்தின் கூட்டணிக் கட்சியாகப் போட்டியிட்ட 20 இடங்களில், 1.77% வாக்குகளைப் பெற்று, ஒன்றில் வெற்றி பெற்றது. 2017-இல், 117 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியபோது, பி.எஸ்.பி ஒரு வெற்றியைப் பெறவில்லை, 1.5% வாக்குகளைப் பெற்றது.
உத்தரகாண்டில், பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட்ட 54 இடங்களில் 4.82% வாக்குகளைப் பெற்று இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கட்சி தனது கணக்கைத் தொடங்கத் தவறிவிட்டது. ஆனால், சுமார் 7% வாக்குகளைப் பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”