உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில், அந்நாட்டு வான்வெளியில் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, சில தினங்களுக்கு முன் உக்ரைனின் கெர்சனை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலைியல், உக்ரைன் வான்வெளியில் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த வீடியோவில், போர் விமானம் ஒன்று தாழ்வாக மிக வேகமாக பறந்துச் செல்கிறது.
இதனையடுத்து, சில தொலைவில் தரையில் பயங்கரமாக குண்டு வெடித்து சிதற, அங்கிருந்து ஒரு போர் விமானம் பறந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, சில நிமிடங்களில் மற்றொரு போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு தரையில் விழுந்து வெடித்து சிதறுகிறது.
🔴Ukrayna Silahlı Kuvvetlerine ait Su-25 saldırı uçağının düşme anı. pic.twitter.com/OTqXFYBgzV
— Conflict (@ConflictTR) March 17, 2022
குறித்த சம்பவம் கெர்சனில் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் தரையில் விழுந்து வெடித்துச் சிதறிய விமானம் உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான SU-25 ரக போர் விமானம் என கூறப்படுகிறது.
அதேசமயம், வெடித்து சிதறிய போர் விமானத்தில் பயணித்த வீரர்களின் நிலை குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.