கேரள மாநிலம் திருச்சூர் அருகே திருவிழாவில் பங்கேற்ற யானை, மற்றொரு யானையை தந்தத்தால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆறாட்டுப்புழா கோவில் விழாவில் மூன்று யானைகள் பங்கேற்ற நிலையில், அந்த யானைகளில் ஒன்று திடீரென மற்றொன்றை தந்தத்தால் குத்தி தள்ளியது. குத்தி தள்ளப்பட்ட யானை சாலையோர பள்ளத்தில் விழுவதில் இருந்து நூலிழையில் தப்பியது.
இதனைக் கண்ட மக்கள் ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடித்த நிலையில், சிலர் படுகாயமடைந்தனர். பின்னர், சிறிது நேரம் போராடி பாகன்கள் யானையை அமைதிபடுத்தி அழைத்துச் சென்றனர். யானைகளின் உடற்தகுதி (Fitness) சான்றிதழை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.