10 மாத உழைப்பு என்னன்னு நாளைக்குத் தெரியும்.. இலவசங்கள் என்பது முதலீடு.. பிடிஆர் செம டிவீட்..!

2022-23ஆம் நிதியாண்டுக்கான தமிழகப் பட்ஜெட் அறிக்கையை மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யும் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று டிவிட்டரில் அதிரடியாகப் பல டிவீட்களைச் செய்துள்ளார். குறிப்பாக நாளை பட்ஜெட் எப்படி இருக்கும், தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து டிவீட் செய்துள்ளது.

மேலும் 10 மாத உழைப்பின் பலன் நாளை வெளியிடப்படும் பட்ஜெட் அறிக்கையில் தெரியும் என்று நம்பிக்கை உடன் தெரிவித்துள்ளார்.

கலாச்சாரவாதிகள் இந்த வளர்ச்சி அரசியல் கொள்கை மற்றும் நிர்வாகத் திறனால் வந்தது எனக் கூறாமல் எதிர்பாராத விதமாக வந்தது எனக் கூறுவார்கள். ஆனால் வளர்ச்சி உண்மையில் திராவிட மாடலில் இருந்து வந்துள்ளது. அதற்காக 4 வீடியோக்களைப் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டு உள்ளார்.

மான்டேக் சிங் அலுவாலியா

மான்டேக் சிங் அலுவாலியா

இந்தியப் பொருளாதாரத்தைத் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் வழிநடத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என மத்திய அரசின் திட்ட குழுவின் துணை தலைவராக இருந்த மான்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார். இந்தியாவிலேயே தொழிற்துறை, கட்டமைப்பு, கல்வி, வாழ்வியல் என அனைத்திலும் சிறந்து விளங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் மான்டேக் சிங் அலுவாலியா.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்தியாவில் தமிழ்நாட்டைப் போன்ற வளர்ந்த மாநிலங்களில் இருந்து கிடைக்கும் அதிகப்படியான வருவாயைப் பின்தங்கிய மாநிலங்களுக்குத் தொடர்ந்து அதிகப்படியான அளவில் தொடர்ந்து கொடுக்கப்படும் பட்சத்தில், தத்தம் மாநிலங்கள் கணக்கிட்ட அளவிற்கு உயராத பட்சத்தில் ஒட்டுமொத்த பொருளாதாரம் தோல்வியைச் சந்திக்கும் எனப் பிடிஆர் தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்வாதாரம்
 

மக்களின் வாழ்வாதாரம்

பின்தங்கிய மாநிலங்களுக்கு வளர்ந்த மாநிலங்களின் வருவாயை அளிக்கும் போது விருப்பத்தின் பெயரில் அளிக்காமல் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் அதற்கான திட்டத்திலும் பணத்தைச் செலவிட வேண்டும்.

வருவாய் பகிர்வின் அளவு

வருவாய் பகிர்வின் அளவு

ஐரோப்பா, அமெரிக்காவில் மாநிலங்கள் மத்தியில் வருவாய் பகிர்வின் அளவு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களில் மற்றும் பின்தங்கிய மாநிலங்களுக்கு மத்தியில் வருவாய் பகிர்வு இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறை

கல்வித்துறை

மத்திய அரசு, மாநில அரசுகள் தங்களது பட்ஜெட்டில் வெறும் 2-3 சதவீதம் வரையில் தான் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. மேலும் கல்வியின் தரமும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது, இதேவேளையில் கல்விக்கான செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 500 கோடி செலவில் ஐஐடி கல்லூரி துவங்கத் தயாராக இருக்கும் 500 கோடி செலவில் 500 பள்ளிகளுக்குச் செலவுசெய்யப்படுவது இல்லை. இது சரியான நிதிக்கொள்கையா..? என்ற கேள்வி கேட்டகப்பட்டது.

கல்வி சீர்திருத்தக் கொள்கை

கல்வி சீர்திருத்தக் கொள்கை

தமிழ்நாட்டில் 1920 முதல் பல கல்வி சீர்திருத்தக் கொள்கைகளைக் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதோடு ஏற்றுமதி வர்த்தகம், மொழி ஆதிக்கம், இரு மொழி கொள்கை ஆகியவற்றின் மூலம் உலக நாடுகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் நிலை உயர்ந்தது. இதன் மூலம் இந்திய மாநிலங்கள் மத்தியிலான ஏற்ற தாழ்வுகளைத் தமிழ்நாடு எளிதாகக் கடந்தது.

இலவசங்கள்

இலவசங்கள்

இதேபோல் இலவசங்கள் தான் அனைத்துக்குமான தீர்வு என்பதும், இலவசங்கள் தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம் என்பதும் தவறானவை. உதாரணமாகத் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு இலவச சைக்கிள், இலவச லேப்டாப், இலவச கல்வி, இலவச சீருடை, மதிய உணவு ஆகியவற்றைக் கல்வித் துறையில் வழங்குகிறது.

தனிநபர் வருமானம்

தனிநபர் வருமானம்

இதனாலேயே இந்தியாவில் தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் முன்னோடியாகவும், உயர்கல்வியில் அதிகம் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட மாநிலமாகவும் உள்ளது. இதேபோல் கல்வித்துறையில் அதிக மானியங்கள் அளிக்கும் மாநிலகளில் ஒன்றாகவும் தமிழ்நாடு உள்ளது.

முதலீடுகள்

முதலீடுகள்

இத்தகை இலவசங்கள் அனைத்தும் நாங்கள் எதிர்காலத்திற்காகச் செய்யப்படும் முதலீடுகள், இதை நாங்கள் எப்போதும் இலவசம் என நினைப்பது கிடையாது. மேலும் இதற்காகச் செலவு செய்யும் பணம், பெயர் எங்களுக்கு எப்போதும் முக்கியமில்லை. இத்தகைய அரசியல் ரீதியான தாக்கம் மாநில அரசுகளிடம் வேண்டும், இந்தியாவில் பல மாநிலங்கள் பின்தங்கியிருப்பதற்கு இத்தகைய கொள்கையும், தாக்கமும் இல்லாததும் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

palanivel thiagarajan Says Freebies is not just free, its investment of our Future

palanivel thiagarajan Says Freebies is not just free, its investment of our Future 10 மாத உழைப்பு என்னன்னு நாளைக்குத் தெரியும்.. இலவசங்கள் என்பது முதலீடு.. பிடிஆர் செம டிவீட்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.