கும்பகோணம் நாகேஸ்வரன் திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயம் மற்றும் தும், நாகதோஷ பரிகார தலங்களில் ஒன்றான கும்பகோணம் பெரியநாயகி சமேத நாககேஸ்வர சுவாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில். கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து 9 ஆம் நாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக விநாயகர், பஞ்ச மூர்த்திகள் தேரில் எழுந்தருள தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரில் உலா வந்த சுவாமிகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாளை 18 ஆம் தேதி மகாமகத் திருக்குளத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள அங்கு பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெறும்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM