நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் மலை ரயில் தண்டவாளத்தில் குட்டியுடன் காட்டு யானை உலா வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
குன்னூர் – மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அங்கு மக்கள் செல்ல வேண்டாமென வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை சுற்றுலா காலம் தொடங்கி உள்ள நிலையில், மலை ரயில் பாதையில் யானைகள் உலா வருவதால் அசாம்பாவிதங்கள் ஏற்படும் முன் ரயில்வே நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.