புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மது விற்பனை குறித்து கண் பார்வையற்ற இளைஞர் சங்கர் என்பவர் தொடர்ந்து புகார் அளித்ததால் காவலர்கள் அவரை லத்தியால் தாக்கியுள்ளனர். மேலும் கண்பார்வையற்ற வரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கண்பார்வையற்ற இளைஞரை அழைத்துச் சென்று லத்தியால் தாக்கிய புகாரில் போலீஸார் மீது எஸ்பி நிஷா பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த வகையில் செந்தில், அசோக், பிரபு ஆகிய 3 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 3 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்ய எஸ்.பி நிஷா பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.