தங்கவயல்: பெஸ்காம் நிறுவனம் முறையான வகையில் சீரான மின் விநியோகம் செய்யாததால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.எனவே பெஸ்காம் நிறுவனம் விவசாயிகளுக்கு சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என கோரி பங்காருபேட்டை பெஸ்காம் அலுவலகம் எதிரே கர்நாடக விவசாயிகள் மற்றும் பசுமை படை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பெஸ்காம் நிறுவனத்தை கண்டித்து கோஷம் எழுப்பிய அவர்கள் பெஸ்காம் அதிகாரிகளுக்கு வழங்கிய மனுவில், விவசாயிகள் விவசாயம் செய்வதற்காக அரசு வழங்கும் மின்சாரத்தை சீரான முறையில் வழங்காததால் விளை பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடிவதில்லை. குறைந்த மின் அழுத்தம் காரணமாக மோட்டார் பம்புகள் பழுதடைகிறது. தேவையான நீர் இறைக்கமுடியாமல் பயிர்கள் பாழாகிறது. இதனால் விவசாயிகள் பெறும் நஷ்டம் அடைந்து வருகின்றனர் என்று கூறியிருந்தனர்.