தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித் தொகையை 1500 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மன வளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளிட்ட நாட்பட்ட நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய 5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை, 2000 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 254 பேர் பயனடைவார்கள் எனவும் அதற்காக 31 கோடியே 7 லட்சம் ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.