தங்கவயல்: தங்கவயல் தாலுகா டி.கொல்லள்ளி பஞ்சாயத்தை சேர்ந்த படுமாக்கனள்ளி அடுத்த காட்டுப்பகுதியில் தீப்பற்றி எரிந்ததால் ஏராளமான காட்டு மரங்கள் தீயில் கருகின. தங்கவயல் தாலுகா டி.கொல்லள்ளி பஞ்சாயத்தை சேர்ந்த படுமாக்கனள்ளி அடுத்த காட்டுப்பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல மரங்கள் எரிந்தன. மளமளவென காட்டு தீ பரவியதை கண்ட கிராமத்தினர், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தினர். பேத்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விஷமிகள் தீவைத்திருக்கலாம்’ என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.