கோவையில் உள்ள சாடி வயல் மலைக்கிராமத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தை குட்டி யானை துரத்திய வீடியோ வெளியாகி உள்ளது.
நேற்று மாலையில் சாடி வயல் பகுதியில் இருந்து வெள்ளப்பதி கிராமத்தை நோக்கி அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலை மார்க்கமாக பேருந்தின் எதிரே குட்டியானை ஒன்று வந்ததை பார்த்து ஓட்டுநர் சிறிது தூரத்திலேயே பேருந்தை நிறுத்தினார்.
அப்போது யானை பேருந்தை துரத்தி ஓடி வந்ததையடுத்து ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி வேகமாக இயக்கி சென்றார். பின்னர் ஓட்டத்தை நிறுத்திய யானை வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து பேருந்து அவ்வழியாக சென்றது.