ரஷ்ய இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உக்ரேனிய வீரர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சென்று அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
உக்ரைனின் பல நகரங்களின் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், போரினால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து, பூங்கொத்து வழங்கி ஜெலன்ஸ்கி உடல்நலம் குறித்து விசாரித்தார்.