சண்டிகரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு உள் மற்றும் வெளியரங்கு நிகழ்ச்சிகளில் பொது மக்கள் கூட விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாக யூனியன் பிரதேச ஆலோசகர் தரம் பால் தெரிவித்துள்ளார்.
உள் மற்றும் வெளியரங்கு நிகழ்ச்சிகளில் 50 சதவீதம் பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட உத்தரவு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.